Monday, June 20, 2011

அமராவதி அணை

உடுமலை :

அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் துவங்கியதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், நீர் மட்டம் உயர்ந்தது. சாகுபடி பணிகளை மேற்கொள்ள பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு, அணையிலிருந்து கீழ் மதகுகளை திறந்தார். மதகுகள் வழியாக ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் கரைபுரண்டோடியது. நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 51 அடியாக இருந்தது.

யிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் துவங்கியதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், நீர் மட்டம் உயர்ந்தது. சாகுபடி பணிகளை மேற்கொள்ள பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு, அணையிலிருந்து கீழ் மதகுகளை திறந்தார். மதகுகள் வழியாக ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் கரைபுரண்டோடியது. நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 51 அடியாக இருந்தது.



நன்றி - தினமலர்

Monday, June 06, 2011

திண்டுக்கல் - கோவை- சக்தி வழியாக பெங்களூருக்கு, தேசிய நெடுஞ்சாலை

உடுமலை -
திண்டுக்கல் - கோவை- சக்தி வழியாக பெங்களூருக்கு, தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றும் பணி அடுத்தாண்டு துவங்கும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கலில் இருந்து கோவை - சக்தி வழியாக பெங்களூருக்கு, தேசிய நெடுஞ்சாலை(எண்.209) ரோட்டை விரிவுபடுத்துவது குறித்த கருத்துக் கேட்பு கூட்டம், உடுமலையில் நடந்தது. கூட்டத்திற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்து பேசியதாவது: மதுரையிலிருந்து கோவை செல்லும் வாகனங்கள் செம்பட்டி, தாராபுரம் பல்லடம் வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலையை அதிகளவு பயன்படுத்துகின்றன. இதனால், நெரிசலும் விபத்துகளும் அதிகரிக்கின்றன. இந்த ரோட்டில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க, தேசிய நெடுஞ்சாலை 209ஐ மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்த ரோடு சத்தியமங்கலம் வழியாக, பெங்களூரு வரை செல்கிறது. நான்கு மாவட்டங்களைக் கடந்து செல்லும் இந்த ரோட்டில் நடத்திய சர்வே அடிப்படையில், சில இடங்களில் இருவழிச்சாலையாகவும், பிற இடங்களில் நான்குவழிச் சாலையாகவும் மாற்ற கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின்படி, ஏழு இடங்களில் ரயில்வே கிராசிங் உள்ளது. குடியிருப்புகள் அதிகம் இடிக்கப்பட வேண்டிய நிலையை தவிர்க்க, குறிப்பிட்ட சில நகரங்களுக்கு பை-பாஸ் அமைக்கப்படும். அனைத்து நகரங்களிலும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் கோரிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அடுத்தகட்டமாக நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்தாண்டில் டெண்டர் விடப்படும் வாய்ப்புள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கிடும் பாலங்கள், பை-பாஸ் தேவையான நகரங்கள் போன்ற பிரச்னைகள் தொடராமல் இருக்க, முழு தீர்வாக அடுத்து மேற்கொள்ளும் திட்டம் இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார். 45 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும் :தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டில், பத்து நகரங்களுக்கு பை-பாஸ் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 883 எக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டியதிருக்கும். இதில், மடத்துக்குளம் பை-பாஸ் ரோட்டில் அமராவதி ஆற்றின் குறுக்கே பெரிய பாலம் கட்டப்படும். திண்டுக்கலில் இருந்து கோவை வரை, 149 கி.மீ., நான்குவழிப் பாதையும், இரண்டாம் கட்டமாக சரவணம்பட்டியிலிருந்து அன்னூர் வரை நான்கு வழிப்பாதையும், அன்னூரிலிருந்து கர்நாடக மாநில எல்லை வரை 98 கி.மீ., நீளத்திற்கு இருவழிப் பாதையாக மேம்படுத்தப்படும். நான்கு இடங்களில் வசூல் வரிமையங்களும், மூன்று இடங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தும் மையங்களும் அமைக்கப்படும். பரிந்துரைகளின் அடிப்படையில், நான்குவழிச் சாலை மற்றும் பை-பாஸ் ரோடு அமைக்கப்பட்டால் பணிகளுக்காக 45 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும். இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - தினமலர்